RAW அதிகாரி, பயங்கரவாதிகளால் கைப்பற்றப்பட்ட ஒரு மாலில் பணயக்கைதிகள் மத்தியில், அவர்களின் திட்டங்களை முறியடித்து, ஒரு பயங்கரமான பயங்கரவாதியை அரசாங்கம் விடுவிப்பதைத் தடுக்க வேண்டும், அவர் தனிப்பட்ட செலவில் சிறையில் அடைக்க உதவினார்
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சியுடன் வெளியானது. வழக்கம்போல் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை பார்த்து வருகின்றனர்.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வெறித்தனமான விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும், விஜய் ரசிகர்களில் பலரும் அதேபோல் பொதுவான ரசிகர்களில் பலரும் எதிர்மறையான கருத்தை கூறி வருகின்றனர்.
எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. முதல் பாதி ஓகே ஆனால் இரண்டாம் பாதி சோதிக்கிறது.. படம் எப்போது முடியும் என ஆகிவிட்டது.. டார்க் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. திரைக்கதையில் நெல்சன் சொதப்பி விட்டார். சில சண்டை காட்சிகள் நன்றாக இருக்கிறது, விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட். விஜய் ஸ்டைலாக இருக்கிறார், விடிவி கணேசன் நன்றாக நடித்துள்ளார், பின்னணி இசை மற்றும் பாடல் நன்றாக இருக்கிறது, ஒளிப்பதிவு, சில காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தில் எந்த லாஜிக்கும் இல்லை, சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை. சீரியஸ் படமாகவும் இல்லாமல், காமெடி படமாகவும் இல்லாமல் இருக்கிறது. ஏமாற்றம்தான் என பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் முடிந்த வரை படத்தை காப்பாற்ற முயற்சி செய்து அதில் அவர் தோற்று போயுள்ளார். கதை மற்றும் திரைக்கதையில் சொதப்பி விட்டார்கள். அனிருத் இசை மட்டும் நன்றாக இருக்கிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார். முதல் பாதி கூட ஒருமாதிரி சென்று விடுகிறது. ஆனால், இரண்டாம் பாதி நன்றாக இல்லை என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
மொத்தத்தில் எல்லா தரப்பு ரசிகர்களையும் பீஸ்ட் படம் கவரவில்லை. கதை, திரைக்கதையில் நெல்சன் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல், கிங்ஸ்லி, யோகிபாபு போன்றவர்களை வைத்துக்கொண்டு காமெடியிலும் நெல்சன் கோட்டை விட்டுள்ளார் எனத்தெரிகிறது. அஜித் ரசிகர்கள்தான் இப்படி படத்திற்கு எதிராக பேசி வருகிறார்கள் எனவும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருவதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
Vijay fans in theatre 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 pic.twitter.com/pHfeR3oE5i
— Nirmal (@nirmal_kumar6) April 13, 2022
ஆனாலும், ஒருமுறை பார்க்கலாம்.. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.
விமர்சனங்களை தாண்டி பீஸ்ட் படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.