Home Local news மண்ணெண்ணெய் அருந்திய 17 வயது பாடசாலை மாணவி பலியான சோகம்

மண்ணெண்ணெய் அருந்திய 17 வயது பாடசாலை மாணவி பலியான சோகம்

A 17-year-old schoolgirl who was upset over a dispute between his father and mother died today (22) three weeks after being admitted to the Trincomalee General Hospital after drinking kerosene.

The deceased has been identified as Lakshika Ramanathan, a student of Kantalai, Kovilgram Red Cross village.

The student’s mother commented on the incident. On the 27th of last month, there was a small argument between me and my husband.

The angry daughter shouted. After a while, it came to light that the daughter was drinking kerosene from home.

I went and asked what you did. Then foam came out of his mouth and we took my daughter to Kantalai Hospital.

From there he was sent to Trincomalee Hospital. The girl’s mother Nagarani said that she later died without any treatment.

Kantalai police are conducting further investigations into the incident.

Tragedy kills a 17-year-old schoolgirl who drank kerosene.

மண்ணெண்ணெய் அருந்திய 17 வயது பாடசாலை மாணவி பலியான சோகம்.

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று(22) உயிரிழந்துள்ளார்.

கந்தளாய், கோவில்கிராமம் செஞ்சிலுவைச் சங்க கிராமத்தைச் சேர்ந்த லக்ஷிகா ராமநாதன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 27ம் திகதி எனக்கும், எனது கணவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மகள் சத்தம் போட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மகள் குடித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

நான் போய் என்ன செய்தாய் என்று கேட்டேன். அப்போது அவரது வாயிலிருந்து நுரை வெளியேறியது எனது மகளை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.

அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் சிறுமியின் தாய் நாகராணி தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

schoolgirl, schoolgirl, schoolgirl, schoolgirl, schoolgirl