Home CRIME NEWS அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொடூரமாக கொலை! – காரணம் வெளியானது

அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொடூரமாக கொலை! – காரணம் வெளியானது

Minister Gamini Lokuge’s driver was brutally murdered! – Reason released

Minister Gamini Lokuge’s driver was brutally murdered! – Reason released Police have released more information about the brutal murder of Energy Minister Gamini Lokuge’s driver.

The father of two, a 41-year-old resident of Mavittarai, Kesbewa Kammanawatta, has died.

The incident took place yesterday evening. The man is said to have been murdered by some people who attacked him with sticks and sharp objects due to a personal dispute.

According to preliminary investigations, the deceased first warned the youth who was speeding on a motorcycle in front of his house to slow down.

The enraged youth went home and returned with a group of men who attacked the minister’s driver with clubs and cut him with a barrage of sharp weapons.

The injured succumbed to their injuries after being rushed to the Piliyandala hospital.

Police are conducting an intensive search of the area tonight in search of suspects in connection with the murder, but the suspects are said to have fled the area.

Police are investigating the incident.

Minister Gamini Lokuge's driver was brutally murdered! - Reason released

அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொடூரமாக கொலை! – காரணம் வெளியானது

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மாவிட்டரை, கெஸ்பேவ கம்மனவத்தையில் வசிக்கும் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனிப்பட்ட தகராறு காரணமாக அவரை பொல்லுகளாலும் கூரிய பொருளாலும் தாக்கிய சிலரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் முதலில் தனது வீட்டிற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற இளைஞரை வேகத்தைக் குறைக்குமாறு எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த இளைஞன் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஒரு குழுவுடன் திரும்பி வந்து அமைச்சரின் சாரதியை பொல்லுகளால் தாக்கி கூரிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் பிலியந்தலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் இன்றிரவு அந்த பகுதியில் தீவிர தேடுதல் நடத்திய போதிலும் சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.