தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். விஜய்க்கு நிகராக இவரின் சம்பளம் உயர்ந்துள்ளது.சினிமாவில் நடித்து வந்தாலும் ஒருபக்கம் பைக் ஓட்டுவது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் கண்ட்ரோல் மூலம் குட்டி ஹெலிகாப்டரை இயக்குவது ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்.
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத்துடன் அவர் இணைந்துள்ளார். இது அவரின் 61வது திரைப்படமாகும். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
எனவே, அஜித் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார்.அஜித் பைக் ரேஸில் ஆர்வமுடையவர் என்பதால் அங்கு பிரதீப் மற்றும் சந்தீப் எனும் 2 ரேசர்களை சந்தித்து உரையாடினார். மேலும், சில பைக் ரேசர்களும் அஜித்துடன் உரையாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14ம் தேதி வெளியான திரைப்படம் Kgf 2. முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
யஷ் நடித்த Kgf இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது, எல்லா இடத்திலும் படத்திற்கு நல்ல வசூல் மழை தான்.
அதிலும் தமிழகத்தில் பீஸ்ட் படத்தை தாண்டி Kgf 2 படத்திற்கு இப்போது அதிக திரையரங்குகள் கிடைத்து வருவதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் திரைப்படம் பார்த்த நடிகை ஷாலினி அஜித்குமார்#Beast | #Vijay | #Shalini | #AjithKumar pic.twitter.com/yl5ZO7u5Vs
— PTMovies (@pttvmovies) April 16, 2022
பீஸ்ட் திரைப்படம் பார்த்த நடிகை ஷாலினி அஜித்குமார்சத்தியம் திரையரங்கில் கண்டு களித்துள்ள ஷாலினி .இதுஒருபுறம் இருக்க நடிகர் அஜித் நல்ல படங்களை பார்த்து அந்த கலைஞர்களை பாராட்டுவது வழக்கம். அதேபோல் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் பார்த்த அஜித் இப்போது Kgf 2 படத்தையும் பார்த்துள்ளார்.பின் Kgf 2 பட தயாரிப்பாளரை போனில் தொடர்பு கொண்டு படக்குழுவினருக்கு நல்ல பாராட்டை கொடுத்துள்ளார்.