Home Cinema D. இமான் இரண்டாவது மனைவி பற்றி தெரியுமா? இந்த பிரபலத்தின் மகளா வைரலாகும் தகவல்...

D. இமான் இரண்டாவது மனைவி பற்றி தெரியுமா? இந்த பிரபலத்தின் மகளா வைரலாகும் தகவல் இதோ !!

முதல் மனைவியை பிரிந்த நிலையில் இசையமைப்பாளர் இமான் இரண்டாம் திருமணம் செய்து உள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. ஆனால், படம் வெற்றி பெறாததால் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. அதற்கு பின் தான் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார்.

அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இது குறித்து இமான் கூறிய அவர், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை ஒன்றை பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் .நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல. இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் மதிப்பளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் இசையமைப்பாளர் இமான். இப்படி ஒரு நிலையில் இமான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இமான் திருமணம் செய்துகொண்டுள்ள பெண் எமிலி என்றும், இவர் பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கலை இயக்குனர் உபால்ட் தமிழில் பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கலை இயக்குனராக பணியாற்றிய இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தனது 59வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.

அதில் ஒரு மகள் யஹான் இந்த எமிலி என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் இமான் தனது மறுமணம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேசிய போது மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்புடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்றும்’ கூறி இருந்தார்.

இமான், மணப் பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது . மேலும், நடிகை சங்கீதா, அவரது கணவர் கிரிஷ், குட்டிபத்மினி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் ஒரு சிறிய பெண்ணும் இருக்கிறார். ஒருவேளை இமான் தான் சொன்னதை போல பெண் குழந்தை இருக்கும் பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டுள்ளாரா என்பது தெரியவில்லை.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநிஜமா அஜித்துக்கு இந்த கேரக்டரா..? AK 61 நிச்சயம் தெறி ஹிட்..? வைரலாகும் தகவல் இதோ !!
Next articleமறுக்கப்பட்டது இராணுவத்தின் கோரிக்கை- யாழ்.மாநகர சபைக்கு ஆளுநர் விடுத்த எச்சரிக்கை!