Home Cinema AK62 திரைப்படத்திலிருந்து கிடைத்த தரமான அப்டேட் !! இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்

AK62 திரைப்படத்திலிருந்து கிடைத்த தரமான அப்டேட் !! இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது.

இந்த நிலையில் இவர் தற்பொழுது தனது 61வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் இப்படத்தில் நடிப்போரின் விபரங்கள் மற்றும் இன்னும் வெளியாகவில்லை.

இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது AK62 திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதில் அஜித் தமிழகம் முழுக்க உள்ள உணவு நிறுவனங்களை நடத்துபவராக நடிக்கின்றாராம். இவ்வாறு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.