Home Cinema AK61 படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் அப்டேட் இதோ !!

AK61 படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் அப்டேட் இதோ !!

அஜீத் குமார் ஏகே 61 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள தனது படத்தின் முதல் அட்டவணையை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான பேங்க் செட் அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்தாக மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார்.

ak61

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இதில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ak

இதையடுத்து, படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது. மொத்தம் படப்பிடிப்பு 75 நாட்கள் நடக்கிறது. அதில் சென்னையில் மட்டும் 7ல் இருந்து 10 நாட்கள் நடக்குமாம்.

ak61

இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

“அஜித் கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனியார் விமானத்தில் பறந்தார். ஷூட்டிங் நாளை துவங்கி குறைந்தது இரண்டு மாதங்களாவது தொடரும். தென்னிந்திய முன்னணி நடிகை ஒருவருடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கான அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும்” என்றார்.

ak61

இதனால் அஜித் படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்துள்ளாராம். இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுவிட்டதாம்.

ak61

இதில் முதல் காட்சியே பேங்க்கில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அஜித் தாறுமாறான சூப்பர் கூலான லுக்கில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக 70 நாட்கள் நடைபெறவுள்ளதாம்.

வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

boneykappor ak

இந்த படத்திற்கு முன்பு எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வக்கீலாக நடித்திருந்தார். அடுத்தாக வலிமை படத்தில் பைக்கில் இளைஞர்கள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தும் போலீசாக நடித்திருந்தார். தற்போது பேங்க்கில் பணம் கொள்ளையடிக்கும் பின்னை கதையில் அஜித் நடிப்பதாக தெரிகிறது.

ak61

இந்த திருட்டு த்ரில்லருக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபியைக் கையாள, ஜிப்ரான் இசையமைப்பாளராக இப்படத்தில் உள்ளார். கதாநாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.