தமிழ் சினிமாவில் முதல் இரண்டு படங்களிலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து 3வதாக அஜித் எனும் முன்னணி நட்சத்திரத்தை இயக்கி முடித்த இயக்குனர் தான் வினோத். நேர்கொண்ட பார்வை ரீமேக் திரைப்படம், அதற்கடுத்து வெளியான வலிமை வினோத் படமாக வெளிவரவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது.
தற்போது அந்த குறையை தீர்க்க அஜித்துடன் வினோத் பணியாற்றி வருகிறார். இது முழுக்க முழுக்க வினோத் படமாக எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு நெகட்டிவ் குணம் கொண்ட கதாபாத்திரமாம்.
இயக்குனர் H.வினோத்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து, தற்பொழுது AK 61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதை மக்களிடம் தனியார் வங்கிகள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பது தான் என்றும், மேலும் படத்தில் வங்கியை கொள்ளையடிப்பது போன்ற காட்சிகளும் படமாக்க பட்டு வருதாகவும், இதற்க்கு இரவு நேர படப்பிடிப்பு தான் சரியான நேரம் என்பதால்.
இரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பு இரவு இரண்டு மணி வரை படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படி சுமார் 15 நாட்கள் வரை நடந்த படப்பிப்பில், முழு ஒத்துழைப்பை கொடுத்துள்ளார் நடிகர் அஜித்குமார். இந்த படத்தில் கடன் வாங்கியவர்களிடம், கடன் கொடுத்த வாங்கி ஊழியர்கள் மிக கொடூரமாக நடந்து கொண்டு வசூல் செய்யும் காட்சிகள் மனதை உருக்குவது போன்று அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் இயக்குனர் H.வினோத் தனது தாய் கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முடியாமல் பட்ட கஷ்டத்தையும், மேலும் கடன் காரர்கள் கடனை வசூலிக்க தனது தாயிடம் இரக்கமில்லாமல் நடந்து கொண்ட சம்பவங்களை மையமாக கொன்டு, இயக்குனர் H.வினோத் தனது தாய்க்கு நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இந்த படத்தின் கதையை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சினிமாவாசிகள் அப்போ , கண்டிப்பா படத்தில் வினோத் சம்பவம் இருக்கு. தீரன் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க இயக்குனர் வினோத்தை இந்த படத்தில் பார்க்கலாம் என கூறி வருகின்றனர்.