தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் தற்போது அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK 61-ல் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் அஜித், வினோத், போனி கபூர் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது.
ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் AK 61 படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது, ஆம் அதன்படி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாடல்களை எல்லாம் தவிர்த்துவிட்டார்களாம்.
மேலும் படக்குழு இப்படத்தின் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் தற்போது கூறப்படுகிறது.
The BIG 🥁@GhibranOfficial BGM 🎵🎶#AjithKumar #AK61 #Valimai pic.twitter.com/w0dsQ6Rgzc
— 𝐒𝐀𝐌𝐑𝐀𝐓 𝐀𝐉𝐈𝐓𝐇 👑 (@SamratAjithFC) May 14, 2022