Home Cinema AK 61 படத்தின் கதாநாயகி இவரா !! முந்தைய படத்தின் நாயகியை புக் செய்த எச்.வினோத்...

AK 61 படத்தின் கதாநாயகி இவரா !! முந்தைய படத்தின் நாயகியை புக் செய்த எச்.வினோத் !இறுதியில் நடந்த மாற்றம்

அஜித் நடிக்கவிருக்கும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியான.

இந்த படத்தில் நாயகியாக தபு நடிப்பார் என்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இருவருமே நடிக்கவில்லை என்பதை படக்குழுவினர் சமீபத்தில் உறுதி செய்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக ரகுல் பிரீதி சிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எச் வினோத் இயக்கிய ’தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து இருந்த நிலையில் மீண்டும் தனது முந்தைய படத்தில் நடித்த நடிகையை ‘அஜித் 61’ படத்திற்காக புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் ஒரு கிளாமர் நாயகியாக ராய்லட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அவரும் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் 61 படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களில் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅமெரிக்காவில் எலைட் ப்ரெப் பள்ளிக்கு அருகே துப்பாக்கி ஏந்திய நபர் நான்கு பேர் காயமடைந்த நிலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதால் பரபரப்பு !!
Next articleசுரேஷ் கோபியின் 253வது படத்தின் தலைப்பு இதுவா ? வைரலாகும் தகவல்