Home Jaffna News மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் நிறுத்திவிட்டு கோவில் கும்பிட சென்றவருக்கு நடந்த கதி

மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் நிறுத்திவிட்டு கோவில் கும்பிட சென்றவருக்கு நடந்த கதி

யாப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வைரவர் கோவிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றவருடைய மோட்டார் சைக்கிள் அவருடைய கண் முன்னால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

அராலி பகுதியை செர்ந்த ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிளை இயக்க நிலையில் வைத்துவிட்டு கல்லுண்டாய் வைரவர் கோவிலைத் தரிசித்து கொண்டிருந்தார்.

இதன்போது அப்பகுதியில் நின்ற ஒருவர் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஸ்கவர் (Discover) NP – WN 3141 என்ற இலக்க மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 26/04/2022, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleபீஸ்ட் படத்தை ஓட வைக்குமா விஜய் அளித்த பிரியாணி !! பீஸ்ட் 2 எப்போ வரும் தலைவவா!!!வைரலாகும் தகவல் இதோ !!