தமது 18 வயதான மகள், வீட்டிற்கு தெரியாமல் ஓடிச்சென்று, 43 வயது நபரை காதல் திருமணம் முடித்துள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
ரக்வான பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது.
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 18 வயதான தமது மகள் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் ரக்வான பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 43 வயதுடைய திருமணமான மூன்று பிள்ளைகளின் தந்தையுடன் அவர் காதலில் விழுந்து, அந்த நபருடன் ஓடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர் இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட போது, 43 வயது காதலனுடன் விருப்பப்பட்டே சென்றதாக யுவதி தெரிவித்துள்ளார்.
43 வயது காதலனின் தொலைபேசியை பொலிசார் சோதனை செய்த போது, அவர்கள் உடலுறவு கொள்ளும் காட்சிகளையும் பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது.
ஆபாச காட்சிகளை பதிவு செய்த இருவரையும் கைது செய்து நேற்று (13) பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.