Home Local news 25 கோடி ரூபா பெறுமதியான டொலர்கள் கடத்தல்:

25 கோடி ரூபா பெறுமதியான டொலர்கள் கடத்தல்:

சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான டொலர்களை கடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை சிஐடி எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் அந்த விசாரணைப் பிரிவு நேற்று ( 31) கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல முன்னிலையில் விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்ததுடன் அதனை மையப்படுத்தி இரு சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

25 கோடி ரூபா பெறுமதியான டொலர்கள் கடத்தல்:

இலங்கையிலுள்ள ஒரு நிறுவனம், பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் பேரில், இலங்கையிலிருந்த 12 இலட்சத்து 65 ஆயிரத்து 882 அமெரிக்க டொலர்களை ( இலங்கை பெறுமதியில் 25 கோடியே 82 இலட்சத்து 39 ஆயிரத்து 928 ரூபா) எற்றுமதி செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாக சிஐடியினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளில், இவ்வாறு டொலர்களை ஏற்றுமதி செய்த போதும் அதற்கான பெறுமதியில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிய வந்ததாகவும், அது குறித்த மேலதிக விசாரணைகள் இடம் பெறுவதாகவும் சிஐடியின் சட்டவிரோத சொத்து தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில், மொஹம்மட் அனீஸ் மொஹம்மட் ஹசீன், மொஹம்மட் நஸார் ஆகிய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அதனால் சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்யுமாறும் சிஐடியினர் நீதிமன்றில் கோரினர்.

இதனை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல சந்தேக நபர்கள் இருவரினதும் வெளிநாட்டு பயணத்தை தடை செய்ய உத்தரவிட்டதுடன், இது குறிஒத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிஐடியின் சட்ட விரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய கடந்த ஜனவரி மாதம் சிஐடிக்கு முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்த வாவா சுரேஷ் ராஜ நாகம் தீண்டியதால் கவலைக்கிடம்:
Next articleமுச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய ரயில் ! மூவர் பலி