நாட்டின் பல பாகங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் 6 பேர் உயிரிழந்தனர்.
மாதம்பை, கடுபொத்தை, தங்காலை, அலவ்வ மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களிலே இவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 19 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குவார் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.