Home நாட்டு நடப்புக்கள் 2 நாட்கள் வீட்டுக்கு போகாத இளைஞன்: எரிபொருள் வரிசையிலேயே பிறந்தநாள் கொண்டாட்டம்!

2 நாட்கள் வீட்டுக்கு போகாத இளைஞன்: எரிபொருள் வரிசையிலேயே பிறந்தநாள் கொண்டாட்டம்!

எரிபொருளைப் பெறுவதற்காக இரண்டு நாட்கள் வரிசையில் நிற்கும் இளைஞன் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். இதை அறிந்த வரிசையிலிருந்த ஏனையவர்வள் ஒன்றுதிரண்டு, வரிசையிலேயே அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

பேராதனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (21)இந்த சம்பவம் நடந்தது.

பேராதனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் என தெரிவிக்கப்பட்டதையடுத்து வரிசையில் நின்ற இளைஞர்கள் அருகில் உள்ள கடையில் இருந்து கேக்கை எடுத்து வந்து பிறந்தநாள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாள் கொண்டாடும் இளைஞன் இன்றும் வீடு செல்லாமல் வரிசையில் இருக்கிறார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபுல்மோட்டையில் குடும்ப தகராறில் நபரொருவர் மரணம்
Next articleதிருகோணமலை எரிபொருள் நிலையத்தில் முறுகல் நிலை!! எரிபொருள் தாங்கியை மறித்து போராட்டம்