Home Local news 2 கிலோ 79 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 51 வயதுடைய நபர் கைது!

2 கிலோ 79 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 51 வயதுடைய நபர் கைது!

வத்தளை பகுதியில் 2 கிலோவிற்கும் அதிக ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை பேலியகொடை குற்ற விசாரணைப்பிரிவினரால் வத்தளை நகரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பிலேயே 2 கிலோ 79 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவராவார். குறித்த சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எவ்வாறு போதைப்பொருள் கிடைக்கப் பெற்றது. அவர் யாரிடம் அதனை வழங்க திட்டமிட்டிருந்தார் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் வத்தளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.