Home CRIME NEWS 17 வயது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர்

17 வயது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர்

ஈரானைச் சேர்ந்த ஒரு நபர் 17 வயதான தனது மனைவியை கொலை செய்து, துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்துள்ளார்.

இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை ஆய்வு செய்த பொலிஸார், மோனா ஹெய்தாரி என்ற 17 வயது பெண்ணின் தலை அது என்பதை கண்டறிந்தனர். ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் அந்த பெண் வசித்த இடத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மறைந்திருந்த அந்த யுவதியின் கணவன் சஜாத் ‍‍‍‍‍‍ ‍‍ஹெய்தாரி மற்றும் கணவனின் சகோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

மேற்படி யுவதி? தன் கணவனிடமிருந்து தப்பி துருக்கிக்கு சென்றிருந்தார். எனினும் பின்னர் மீண்டும் ஈரானுககுத் திரும்பினார். அதன்பின் அவரின் கணவனும் கணவனின் சகோதரனும் இணைந்து அந்த யுவதியை கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் என்சீஹ் கசாலி, நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கோரியுள்ளார்.