Home Cinema 12 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமார் இயக்கப்போகும் படத்திற்கு ஹீரோ இந்த பிரபலத்தின் மகனா ? வைரலாகும்...

12 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமார் இயக்கப்போகும் படத்திற்கு ஹீரோ இந்த பிரபலத்தின் மகனா ? வைரலாகும் தகவல் !!

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பலரும் சுப்ரமணியபுரம் படத்தை பார்த்து வியந்தனர். பலரின் விருப்பமான சினிமாவாகவும் இருந்தது.

இதனால், 2010-ம் ஆண்டு ஈசன் படத்தை இயக்கிய சசிகுமார், அதன்பிறகு இயக்கத்துக்குத் திரும்பவில்லை.மொத்தம் இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய சசிகுமார், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் சசிகுமார் மீண்டும் இயக்கத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். 12 வருடங்களுக்கு மேலாக எந்தப் படத்தையும் இயக்காத இவர், பலராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டார்.

இதற்கு சசிகுமார் சில பேட்டிகளில் பதிலளித்திருந்தார். நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை அடிப்படையாகக் கொண்டு சசிகுமார் ஒரு வெப் சீரிஸை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முக்கிய வேடத்தில் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுர வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு சசிகுமார் இயக்கும் வெப் சீரிஸை வேல்ராஜ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல வருடங்களுக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்கப் போகிறார் என்ற தகவல் பல சினிமா ரசிகர்களையும் ஆவலுடன் ஆக்கியுள்ளது. மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.