Home Local news வைத்தியரை ஏமாற்றிய 20 வயது யுவதி கைது!

வைத்தியரை ஏமாற்றிய 20 வயது யுவதி கைது!

இலங்கையில் கோவிட் வைரஸ் பரவ ஆரம்பித்த 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முகக் கவசங்களை வழங்குவதற்காக கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் மருத்துவர் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட நான்கு லட்சம் ரூபாயை மோசடி செய்த 20 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதியை தவிர முதியவர் ஒருவரையும் கொழும்பு மத்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை பகுதியை வசிப்பிடமாக கொண்ட மருத்துவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

வைத்தியரை ஏமாற்றிய 20 வயது யுவதி கைது!

இந்த முறைப்பாட்டுக்கு அமைய யுவதியும் 80 வயதான நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவவுனியா மாவட்டத்தில் இரு மாதங்களில் 20 பேருக்கு டெங்கு!
Next articleஇணையத்தில் வைரலாகும் தேங்காய் சிரட்டை Mouse