Home Local news வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் ஊடகவியலாளர் வீட்டில் தாக்குதல்!

வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் ஊடகவியலாளர் வீட்டில் தாக்குதல்!

பிலியந்தலையில் அமைந்துள்ள மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் இல்லத்தின் மீது இனந்தெரியாத குழுவினர் இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

வெள்ளை நிற வாகனமொனறில் முகத்தை மறைத்துக் கொண்டு, ஆயுதங்களுடன் வந்த 4 பேரே தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

வாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரியின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் ஊடகவியலாளர் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுத் தொகுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் தனது வீட்டின் மீது கற்களை வீசியதாக ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வீட்டின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக அவர் கூறினார்.

உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததாக தெரிவித்த சமரவிக்ரம, அவர்கள் குறித்த இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.