Home Local news வீழ்ந்த யானையை மீட்கும் பணியில் வனவிலங்கு அதிகாரிகள்

வீழ்ந்த யானையை மீட்கும் பணியில் வனவிலங்கு அதிகாரிகள்

திருகோணமலை – பன்குளம் பகுதியில் யானையொன்று குழிக்குள் விழுந்து சுமார் எட்டு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்கு போராடி வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் இவ்வாறு குறித்த யானை வீழ்ந்து உயிருக்கு போராடி வருகின்றது.

இந்நிலையில் விழுந்து கிடக்கும் யானையை எழுப்பும் நோக்கில் மருந்துகள் வழங்கியும் யானை எழும்ப முடியாத நிலையில் வாய்க்கால் ஊடாக மக்கள் நடமாடும் பகுதிக்கு வந்துள்ளதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

யானைக்கு என்ன நடந்தது பற்றி தெரியாது எனவும் நாளை 16ஆம் திகதி வைத்திய குழுவொன்று பன்குளம் பிரதேசத்திற்கு வருகை தர உள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் 9 அடி நீளமான யானை எனவும் 35 வயதுக்கு மேற்பட்ட வயது இருக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.