தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சமந்தா. பல்லாவரம் இளம் பெண்ணாக அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இதன்பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க ஆரம்பித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது திகழ்ந்து வருகிறார். மேலும் இடையில் நடிகர் சித்தார்த்துடன் காதல், பின் பிரேக்கப் என்று இருந்த நிலையில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார்.
2017ல் இருவர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடித்து வந்த சமந்தா இடையில், சூப்பர் டீலக்ஸ், தி பேமிலி மென் 2 உள்ளிட்ட படங்களில் சர்ச்சையான காட்சிகளில் நடித்து நாக சைதன்யா குடும்பத்தினரை முகம் சுளிக்க வைத்தார்.
இதனால் நாக் சைதன்யாவும் சமந்தாவும் 4 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக விவாரத்து செய்தியை அறிவித்தனர். விவாகரத்துக்கு பின் இருவரும் இரு துருவங்களில் சென்றுவிட்டனர். இதனை முழுவதுமாக பயன்படுத்தி சுதந்திர பறவையாக ஊர் சுற்றியும் படங்களில் க்ளாமரில் தாராளம் காட்டியும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடு 5 நிமிடத்தில் 5 கோடியை சம்பாதித்துச்சென்றார்.
நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தபோது அவர்கள் சார்பில் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்துள்ளனர். 200 கோடி ரூபாயை துளிக்கூட மதிக்காத சமந்தா வேண்டவே வேண்டாம் என்று கூறியதோடு திருமண புடவையையும் திரும்ப கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா நாக சைதன்யாவை காதலிக்கும் போதும் சரி திருமணம் செய்த பிறகும் சரி அவர் உடம்பில் ஒருசில இடங்களில் டேட்டூ குத்தி இருப்பார். அதில் இடுப்பு பகுதியில் கணவரின் பெயரான நாக சைதன்யாவின் Chay என்ற எழுத்தினை பச்சையாக குத்தி இருந்தார்.
தற்போது அந்த டேட்டூவை முற்றிலுமாக எடுத்துள்ளாராம். சமீபத்தில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படத்தில் அப்படியான டேட்டு காணாமல் இருப்பதை ரசிகர்கள் கண்டு கண்ஃபார்மே பண்ணீட்டீங்களா சமந்தா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.