Home Local news வியாபாரி ஒருவரின் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

வியாபாரி ஒருவரின் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் இன்று (03) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (03) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவம் தொடர்பில் புளியங்கடவர, முகுனுவடவன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தம் கேட்டு அவரும் தனது குடும்பத்தினரும் எழுந்து பார்த்தபோது, ​​தனது வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு யாரோ ஒருவர் தீ வைத்ததைக் கண்டதாகவும் இதனால் சுமார் 8 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்தார்.

வியாபாரி ஒருவரின் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை வியாபாரி ஒருவரின் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை வியாபாரி ஒருவரின் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் தீயில் கருகி உயிரிழந்த 16 வயது மாணவி! நடந்தது என்ன??
Next article3000 மில்லியனைத் திருடிய சஜித் பிரேமதாச