Home Cinema விஜய்-னாலயே முடியல, சூர்யாவால முடிந்தது ?வெளிவந்த அதிர்ச்சி உண்மை இதோ !!

விஜய்-னாலயே முடியல, சூர்யாவால முடிந்தது ?வெளிவந்த அதிர்ச்சி உண்மை இதோ !!

தமிழ் சினிமாவில் கடுமையாக உழைக்கும் திறமைசாலிகளில் சூர்யாவும் ஒருவர். திரையுலகில், தன்னை வளர்த்துக்கொள்ளவும் முன்னணி நடிகராக முன் வரவும் பல யுத்திகளை கற்றுக்கொண்டு முன்னிலை வகுத்து வருகிறார் நடிகர் சூர்யா.

சரி அத விடுங்க… சூர்யா சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சூர்யா கல்லூரியில் சேர எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று யாருக்காச்சும் தெரியுமா.?

ET suriya

சமீபத்தில், ஒரு தனது சமூக வலைதளத்தில் லைவில் ரசிகர்களிடம் கேள்வி பதில் நிகழ்வின் போது, ​​லயோலா கல்லூரியில் சேரும் பொழுது கல்லுரி நிர்வாகம் தனக்கு அனுமதி வழங்க தயங்கியதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

அந்த கல்லூரியில் அட்மிஷன் பெற்ற கோலிவுட் பிரபலங்களின் பல குழந்தைகள் படிக்காமல் பாதியிலேயே வெளியேறிவிட்டதாகவும். அதனால், அந்த இருக்கையை வீணாக்க நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்பட்டதாம்.

இந்நிலையில், நடிகர் சூர்யா படிப்பை வெற்றிகரமாக முடிப்பார் என்று சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார் கல்லூரி முதல்வரிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார். பின்னர், சூர்யாவும் தனது தந்தையின் சொல்லக்கேற்ப தனது இளங்கலை பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து காட்டினாராம்.