நேற்று இரவு 9 மணிக்கு சன் டிவியின் டி.ஆர்.பியின், விளம்பரங்களின் மூலம் வரும் வருவாயும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 10 வருடமாக எந்த பேட்டியும் கொடுக்காமல் இருந்த தளபதி விஜய் பேட்டியளித்து இருந்திருந்தார் என்பதே இதற்கு முழு காரணமாக இருந்திருக்கும்.
பல்வேறு பொது மேடைகளில், பொது வெளியில் தனது கருத்துக்களை கூறி வரும் விஜய் என் பேட்டிகளை மட்டும் தவிர்த்தார் என்கிற கேள்வி ரசிகர்கள் மட்டுமல்ல பலரது மனதிலும் எழுந்திருந்தது. அதற்கு நேற்று ஒளிபரப்பான பேட்டியில் பதிலும் அளித்திருந்தார் தளபதி விஜய்.
அதாவது , ஒரு பிரபல பத்திரிகைக்கு விஜய் 10 வருடத்திற்கு முன்னர் பேட்டியளித்து இருந்துள்ளார். அதில், விஜய் ஒரு கருத்து கூற, அதனை வேறு மாறி எழுதிவிட்டனராம். இதனை 2013லேயே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அதற்கான கண்டனத்தையும், தனது விளக்கத்தையும் கூறியிருந்தார் விஜய்.
அந்த பேட்டியில். ‘இப்போது பல ஹீரோக்கள் இருக்கலாம், அந்த ரசிகர்கள் என் படத்தையும் பார்க்க வேண்டும். அந்த ஹீரோ ரசிகர்கள் ரசிக்கும் படி தான் என் படமும் இருக்கும். எப்பவும், நான் பெரிய இயக்குனர்களின் பேவரைட்டாக இருந்தது கிடையாது. எனது கால்ஷீட்டுகாக யாரும் காத்திருக்க மாட்டாரக்ள்’ இந்த வரிகளை விஜய் குறிப்பிட்டு, அவர்களே பதில்களை உருவாக்கும்போது பேட்டி கொடுப்பதில் எந்த பயனும் இல்லை என பதிவிட்டு இருந்தார்.
தான் கொடுக்கும் பேட்டி, வேறு விதமாக சித்தரித்து எழுதப்படுவதாக விஜய் கருத்தியதன் காரணமாகதான் விஜய் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதில்லை என இதன் மூலம் தெரியவந்துள்ளது.
What is the point in giving an interview when they make up their own answers ..!! pic.twitter.com/CrH8Cg9AeO
— Vijay (@actorvijay) July 5, 2013