Home Cinema ‘விஜய் ‘ குறித்து சி.எஸ்.அமுதன் கூறிய கருத்து கதறும் விஜய் ரசிகர்கள் !!

‘விஜய் ‘ குறித்து சி.எஸ்.அமுதன் கூறிய கருத்து கதறும் விஜய் ரசிகர்கள் !!

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அதைத் தொடர்ந்து விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தையும் கொடுத்தார். வெற்றிப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ ‘தெறி’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கினார். அவர் இப்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் தனது படத்தில் அறிமுகமாகிறார்.

தற்போது இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்கி வருகிறார். குறுகிய காலத்தில் இயக்குனர் அட்லீ அசுர வளர்ச்சி கண்டாலும், அவர் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் வேறொரு படத்தின் சாயலில் தான் இருக்கும் என்கிற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு ராஜா ராணி படம் மெளன ராகம் படத்தின் காப்பி என்றும், தெறி படம் சத்ரியன் பட சாயலில் இருப்பதாகவும், மெர்சல் திரைப்படம் கமலின் அபூர்வ சகோதரர்கள் பட சாயலில் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டன.

இந்நிலையில் இயக்குனர் அட்லீயை பிரபல இயக்குனர் ஒருவர் ட்ரோல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் சி.எஸ்.அமுதன், இவர் சமீபத்தில் டுவிட்டர் வாயிலாக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், உங்கள பொறுத்த வரைக்கும் தமிழ்ல சரியா ரீமேக் செய்யப்பட்ட படம் எது என கேள்வி எழுப்பினார். இதற்கு மெர்சல் என பதிலளித்துள்ளார் அமுதன். இதன்மூலம் அவர் இயக்குனர் அட்லீயை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.