இன்று உலகநாயகன் என்று அனைவராலும் அறியப்படுவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தான் தமிழ் சினிமாவையே அடுத்த நிலைக்கு கொண்டு போனார் என்று கூறலாம். திரைத்துறையில் புதுவிதமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். ஒரு காலகட்டத்தில் கோலோச்சிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் கமல்ஹாசன்.
80களில் இவர் ஆடிய ஆட்டம் சொல்லிமாலாது. பெரும்பாலும் அனைத்து நடிகைகளும் இணைந்து நடித்து விட்டனர். நடித்த ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் மக்களை ரசிக்கவைப்பார். அது இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இவர் மட்டும் அல்ல ரஜினியும் உச்சம் தொட்ட நடிகர். இருவரும் வாழ்ந்த காலம் 80கள் அப்படி என்றே கூறலாம்.
இந்த நிலையில் காலங்கள் போக போக கமலின் படவாய்ப்புகள் குறையத் தொடங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த கமலுக்கு திடீரென ஒரு யோசனை பிறந்ததாம். அதாவது அந்த நேரத்தில் யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களோடு சேர்ந்து படம் பண்ணலாம் அப்படியாவது அந்த நடிகருக்காக வரும் ரசிகர்கள் கூட நம்மையும் பார்க்க வருவார்கள் என்று. அதனால் தான் பிரபுதேவா ஒரு நேரத்தில் பிரபலமாக இருந்தார்,அவரோடு இணைந்து காதலா காதலா படம் பண்ணினார். பிரபுதேவாவிற்கு வந்த ரசிகர்கள் தானாம். ஆனால் படத்தின் வெற்றியை அறுவடை செய்தது கமல்.
அதன்பின் அப்பாஸும் பிரபலமாக இருந்தார் அவரோடு இணைந்து பம்மல் கே சம்பந்தம், மாதவனுடன் இணைந்து அன்பேசிவம் போன்ற படங்கள் எல்லாம் நடித்தார். நடித்த இந்த படங்கள் எல்லாம் செம ஹிட். தற்பொழுது இதே உத்வேகத்துடன் தான் களம் இறங்கியிருக்கிறார் கமல். எந்த இயக்குனர்களெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களோடு இணைந்து படம் பண்ணிக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் லோகேஷ் விக்ரமில் விஜய்சேதுபதி, அடுத்த படம் பா.ரஞ்சித் இவர்களெல்லாம் இப்ப இருக்கும் இயக்குனர்களில் மிகவும் பேசப்படும் இயக்குனர்கள். யாரும் இவரை தேடி போகவில்லை கமல் தான் இயக்குனர்களை தேடி செல்கிறார் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.