Home Cinema விக்ரம் படத்தில் இளமை தோற்றத்திற்கு சென்ற கமல் நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் !!

விக்ரம் படத்தில் இளமை தோற்றத்திற்கு சென்ற கமல் நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் !!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் “விக்ரம்”. இப்படத்தில் உலகநாயகன் தவிர நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் மற்றும் மைனா நந்தினி நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

‘ஜல்லிக்கட்டு’ மலையாளப் படத்துக்காக தேசிய விருது பெற்ற கிரீஷ் கங்காதரன் விக்ரமுக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது.

கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்ரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு பான்-இந்தியப் படமாக – பிக்ஜெஸ்ட் ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் டிஓபி கிரிஷ் கங்காதரன், விக்ரமிடம் இருந்து எடுக்கப்பட்ட பி.டி.எஸ் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தின் ஒரு பக்கத்தில் கமல்ஹாசனின் டீன் ஏஜ் தோற்றம். விக்ரம் படத்தில் கமல்ஹாசனை இளமையாகக் காட்ட டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செட் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் போல் காட்சியளிக்கிறது.

விக்ரம் படத்தில் இளமை தோற்றத்திற்கு சென்ற கமல் நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article“தரமான நாட்டுக்கட்ட…” – குட்டியான கவுனில் துள்ளல் போஸ் கொடுத்துள்ள இந்துஜா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Next articleஎம்எஸ் தோனி புகழ்ந்து தள்ளிய ரவீந்திர ஜடேஜா! என்ன சொன்னார் தெரியுமா ?