Home Accident News வவுனியா கனகராயன்குளத்தில் மகிழுந்துடன் பேரூந்து மோதுண்டு விபத்து : ஜவர் காயம்

வவுனியா கனகராயன்குளத்தில் மகிழுந்துடன் பேரூந்து மோதுண்டு விபத்து : ஜவர் காயம்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று மதியம் மகிழுந்துடன் இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஜவர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று கனகராயன்குளம் பகுதியில் வீதியில் மறுபக்கம் திரும்ப முற்பட்டுள்ளது.

இதன் போது அதே பாதையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாதையினை விட்டு கீழிறங்கி அருகேயிருந்த ஓர் காணியினுள் நுழைந்தது.

இவ் விபத்தில் ஜவர் காயமடைந்ததுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.