Home வவுனியா செய்திகள் வவுனியாவில் மனித எச்சம் மீட்பு

வவுனியாவில் மனித எச்சம் மீட்பு

வவுனியா மாமடு காட்டுப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மனித எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய தனுஸ்க அமரதாச என்பவரின் எச்சமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் மாமடு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பிரதேசவாசிகளால் தேடுதல் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த மனித எச்சம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனித எச்சம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் நஞ்சுப்போத்தல் ஒன்றும் காணப்பட்ட போதிலும் குறித்த மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் மனித எச்சம் மீட்பு வவுனியாவில் மனித எச்சம் மீட்பு வவுனியாவில் மனித எச்சம் மீட்பு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் பேஸ்புக்கில் காதல் வலை விரித்து நூதன திருட்டு: பழகிப் பார்க்க பண்ணை கடற்கரைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி!
Next articleபட்டப்பகலில் கத்திமுனையில் வழிப்பறி..! வழிப்பறி கொள்ளையர்களை மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய பொதுமக்கள், வல்லையில் நடந்த துணிகரம்.