பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிசார் வீடொன்றிற்கு விசாரணைக்கு சென்ற வேளையில், பொலிசாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஈ.பி.டி.பி பிரதேசசபை உறுப்பினரான சிவலிங்கம் நிமல் என்பவரே கைதானார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.