Home world news வரிசையில் நின்று உழைக்கும் இளைஞன்!

வரிசையில் நின்று உழைக்கும் இளைஞன்!

பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வரிசையில் காத்திருப்பதையே தொழிலாகச் செய்கிறார். இதன்மூலம் அவர் தினமும் சுமார் 44,0000 வரை ரூபா சம்பாதிக்கிறாராம்.

பல்வேறு தேவைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலையில், பலர் சில நிமிடங்கள் கூட வரிசையில் நிற்பதை விரும்புவதில்லை.

ஆனால், லண்டனைச் சேர்ந்த 31 வயதான  பிரெடி பெக்கிட் எனும் இளைஞர் வரிசையில் நிற்பதை தனது தொழிலாகக் கொண்டுள்ளார்.

வரிசையில் நின்று உழைக்கும் இளைஞன்!

டிக்கெட் வாங்குதல் முதலான நடவடிக்கைகளுக்காக வரிசையில் காத்திருக்க விரும்பாத பலர், தமக்கு பதிலாக பிரெடி பெக்கிட்டை நிற்க வைத்துவிட்டு, அவருக்கு பணம் வழங்குகின்றனர்.

தினமும் 8 மணித்தியாலங்கள் இவ்வாறு வரிசைகளில் நிற்கும் பிரெடி பெக்கிட் 160 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 44,000 ரூபா) வரை வருமானம் பெறுகிறார்.

பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்போது தனக்கு அதிக வருமானம் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.

‘பணத்தைக் கொண்டுள்ள, ஆனால் நேரம் இல்லாதவர்களுக்காக நான் வரிசையில் நிற்கிறேன்’ என்கிறார் பிரெடி பெக்கிட். அதேவேளை, நடுங்க வைக்கும் குளிரிலும் தான் பணியாற்ற வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிரவப் பாலை பொதிகளில் வழங்க யோசனை;
Next articleபோக்குவரத்து தண்டம் விதித்த பொலிஸ்காரரை கோடாரியால் கொத்திவிட்டு விசம் அருந்தய நபர்