தங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறி புத்தர் சிலையொன்றை ஐந்து கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலையின் கண்கள் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆனது என்றும் சந்தேக நபர்கள் வாங்குபவரிடம் கூறியுள்ளனர்.
சிலையின் உயரம் சுமார் 12 அங்குலம். எடை சுமார் 14.6 கிலோ.
கைது செய்யப்பட்ட இருவரும் தெஹியத்தகண்டிய லிஹினியாகம பகுதியைச் சேர்ந்த 27-34 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது மேலும் மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.