Home Jaffna News யாழ்.பல்கலை மாணவிகள் இடையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில்

யாழ்.பல்கலை மாணவிகள் இடையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் மாணவிகள் இருவருக்கிடையில் சிறிய மோதல் ஏற்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வாடகை அறையில் தங்கியிருந்த மருத்துவபீட, கலைப்பீட மாணவிகளிற்கிடையிலேயே மோதல் ஏற்பட்டது.

கலைப்பீட மாணவி அடிக்கடி தொலைபேசியில் உரையாடுபவர் என்றும், இதனால் தனது கல்விக்கு இடையூறு ஏற்படுவதாக மருத்துவபீட மாணவி தொடர்ந்து சுட்டிக்காட்டிதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவும் கலைப்பீட மாணவி நீண்டநேரம் தொலைபேசியில் உரையாட, சிலமுறை சுட்டிக்காட்டிய மருத்துவபீட மாணவி, ஆத்திர மிகுதியில் தனது கையடக்க தொலைபேசியினால் கலைப்பீட மாணவியை நோக்கி எறிந்துள்ளார்.

பின்னர் விவகாரம் சமரசம் செய்யப்பட்டதுடன், ஒரு மாணவிக்கு அவரது நண்பர் மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபெண் பொலிஸ் உத்தியோகத்தரை பெற்றோல் ஊற்றி எரித்த கணவன்
Next articleபோதைப்பொருள் கடத்தல்: நோயாளர் காவு வண்டியின் உதவியாளரும் கைது