Home Jaffna News யாழ்.காரைநகரில் கள்ளுத் தவறணையில் நடந்த கோஷ்டி மோதல்..! கத்திக்குத்துக்கு இலக்கான 28 வயது இளைஞன்

யாழ்.காரைநகரில் கள்ளுத் தவறணையில் நடந்த கோஷ்டி மோதல்..! கத்திக்குத்துக்கு இலக்கான 28 வயது இளைஞன்

யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதியில் உள்ள தவறணை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.சுழிபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

நேற்று மாலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரை தவறணை பகுதியில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் மீது கத்தி வெட்டு இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த இளைஞன் வலந்தலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது
Next articleகல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்ற நிலை – பாதுகாப்பு அரண் போட்ட போலிஸார்