Home Accident News யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் பலி!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் பலி!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (27) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

மோட்டர் சைக்கிளில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்திற்குள்ளாகினர்.

இதில், கொட்டடியை சேர்ந்த நவரட்ணராஜா சங்கீத் (31) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாவாந்துறையை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.