Home jaffna news யாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு ! இருவர் இழப்பு

யாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு ! இருவர் இழப்பு

யாழ்- குடாநாட்டில் ஒரே தினத்தில் இருவர் டெங்கு நோய் பாதிப்பு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலைய மாணவன் வ.அஜய் (வயது 11) மற்றும் கஜந்தினி யோகராசா, 2 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 18 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

டெங்கு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமயம் உயிரிழந்துள்ளனர்.

இவர்களது மரணங்களின் பின்னர் குடாநாட்டில் டெங்கு பரவல் அச்சமும் அதிகரித்துள்ளது.