Home Jaffna News யாழில் எரிபொருள் நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல் விநியோகம்!

யாழில் எரிபொருள் நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல் விநியோகம்!

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் வியாபாரம் இடம்பெற்றமையை பொதுமக்கள் கண்டுபிடித்ததால் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்ப நிலையத்தினருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருள் இல்லை. என பதாகைகள் வைக்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையம் பூட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் சிலரின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பபட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள், லொறி என்பவற்றுக்கு திருட்டு தனமாக டீசல் விநியோகித்துக்கொண்டு இருந்தவேளை சிலர் அங்கு கூடி நியாயம் கேட்டுள்ளனர்.

அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முரண்பட்டமையால், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அப்புறப்படுத்தி சென்றுள்ளனர்.

யாழில் எரிபொருள் நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல் விநியோகம்! யாழில் எரிபொருள் நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல் விநியோகம்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 08/07/2022, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleபெண் பொலிஸின் கையை பிடித்திழுத்த பொலிஸ்காரருக்கு விளக்கமறியல்!