Home Cinema மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனின் திருமண வரவேற்ப்பு புகைப்படம் வைரல் !!

மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனின் திருமண வரவேற்ப்பு புகைப்படம் வைரல் !!

மார்ச் 27 அன்று, க்ளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை பாரம்பரிய ஐயங்கார் விழாவில் மணந்தார், அதில் ஒரு வார கால திருமணமும் அடங்கும்.

இந்திய முறைப்படி 2020ல் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணம் தள்ளிப்போனது. மேக்ஸ்வெல் மற்றும் வின்னி திருமணம் மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களின் திருமண அழைப்பிதழ் மஞ்சள் நிறத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் இடம்பிடித்த மேக்ஸ்வெல், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியால் தக்கவைக்கப்பட்டார். மேக்ஸ்வெல் – வினியை பெங்களூரு அணி நிர்வாகம் வரவேற்றது.

இதில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா, கேப்டன் டு பிளெசிஸ் – இமாரி விசர், தினேஷ் கார்த்திக் மற்றும் சக வீரர்கள் கலந்து கொண்டனர். குர்தாவில் டு பிளெசிஸும், சேலையில் அவரது மனைவி இமாரியும் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.