Home Tamil News முல்லைத்தீவு அளம்பில் பகுதியினை பெரும் சோகத்தில் ஆழ்த்திய 3 சகோதரர்களின் மரணம்

முல்லைத்தீவு அளம்பில் பகுதியினை பெரும் சோகத்தில் ஆழ்த்திய 3 சகோதரர்களின் மரணம்

முல்லைத்தீவு செம்மலைக்கடலில் குளிக்க சென்ற மூன்று சகோதரர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் 3 ஆவது சகோதரனின் சடலம் மீட்கப்படுள்ளது.

முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் கோவிலுக்கு நேரே உள்ள கடலில் நேற்று 10.05.2022 மாலை 2.00 மணியளவில் கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த அண்ணன் இரண்டு தம்பிகள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்கள்.

அளம்பில் பகுதியினை சேந்த நாதன் என்று அழைக்கப்படுபவரின் பிள்ளைகளான மூன்று ஆண் பிள்ளைகளுமே கடகில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் 3 ஆவது சகோதரனின் சடலம் கொக்கிளாய் பகுதியில் மீட்கப்படுள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலீசாரும் விரைந்துள்ளார்கள்.

செம்மலை பகுயினை சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளார்கள் இதன் போது மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்கள்.

அளம்பில் பகுதியினை சேர்ந்த ஒரேகுடும்பத்தினை சேர்ந்த 29 அகவையுடைய பத்மநாதன் கிளின்ரன், 26 அகவையுடைய பத்மநாதன் விஜித், 23 அகவையுடைய பத்மநாதன் விலிந்திரன் ஆகிய மூன்று சகோதரர்களே கடலில் காணாமல் போயுள்ள நிலையில் மேலும் 2 சகோதரர்களை தேடும்பனியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளார்.

நேற்று இரவாகியும் 9.00 மணிவரையும் எதுவும் கிடைக்காத நிலையில் பிரதேச இளைஞர்கள், கிராம மக்கள், மீனவர்கள் தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்து வந்த நிலையில் இன்று காலை 3 ஆவது சகோதரனின் சடலம் மீட்கப்படுள்ளது.