Home Local news முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் 30 சதவீதத்தினால் அதிகரிப்பு

முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் 30 சதவீதத்தினால் அதிகரிப்பு

சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மு-கக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மு-கக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் நாளாந்தம் அதிகரிக்கின்றது.

சகல விதமான மு-கக்கவசங்களையும் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் டொலர் பற்றாக்குறை தாக்கம் செலுத்துகிறது.

முகக்கவசங்களுக்கான விலை

இந்தநிலையில் நாளை முதல் மு-கக்கவசங்களின் விலையை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மு-கக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.