Home Cinema மீண்டும் இணையும் குருவி கூட்டணி, ரசிகர்கள் அதிர்ச்சி !!

மீண்டும் இணையும் குருவி கூட்டணி, ரசிகர்கள் அதிர்ச்சி !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Beast Yogibabu

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

Beast

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. விஜய்-யின் 67-வது படத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கவிருக்கிறார்.

Thalapathy66

இப்படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதற்கான பூஜையை வருகிற அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி போட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை லலித் குமாருடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபோதைப்பொருள் வியாபாரியான இளம்பெண் ரூ.17,936,500 பணத்துடன் கைது!
Next articleசகலமமும் தெரியும் அளவிற்கு பிட்டு துணி அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட சாக்‌ஷி