Home Local news மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை

மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை

கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றியை தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருகோணமலை கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை 15 முதல் 20 வயது கொண்டதாக இருக்கலாம் எனவும், கால்நடை வைத்தியரின் தலையீட்டில் யானையின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் வனஜீவராசி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அந்த காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
Next articleபுதையல் தோண்டிய இருவர் கைது!