Home Cinema மிக பிரம்மாண்டமாக நடந்து முடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் திருமணம் !! மாப்பிள்ளை யார் தெரியுமா ?

மிக பிரம்மாண்டமாக நடந்து முடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் திருமணம் !! மாப்பிள்ளை யார் தெரியுமா ?

இசையமைப்பாளரும், பிரபல இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், சவுண்ட் இன்ஜினியரான ரியாஸ்தீன் ரியானை மணந்தார்

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, அயலான் ஆகிய முக்கிய படங்களில் பணியாற்றுகிறார்.

இதில் இயக்குனர் மாரிசெல்வராஜின் மாமன்னன் படமும் குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், சமீப காலமாக துபாயில் தங்கி இருந்து தனது இசைப்பணிகளை கவனித்து வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணமக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

மணமகன் ரியாஸ்தீன் ஷேக் முகமது பிரபல சவுண்ட் என்ஜினியர் ஆவார். இவர் Waves Audio மற்றும் Audinate போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய சான்றளிக்கப்பட்ட பொறியாளர். இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அமித் திரிவேதி ஆகியோருக்கு ரியாஸ்தீன் நேரடி ஒலி பொறியாளராக பணியாற்றியவர்.