தற்போது சினிமா மற்றும் சின்னத்திரைக்கு ஈடாக youtube போன்ற டிஜிட்டல் தளங்களில் சேனல்கள் நடத்தும் பலரும் அதிகம் பாப்புலராக இருக்கின்றனர். அந்த வகையில் பிளாக் ஷீப் என்ற சேனல் நடத்தி வரும் விக்னேஷ் காந்த் youtubeல் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
அவர் மீசைய முறுக்கு, தேவ் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாகவும் நடித்து இருக்கிறார்.இன்று RJ விக்னேஷ் காந்த் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் போட்டோ தற்போது வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் நிலையில் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.