Home Jaffna News மாணவனின் செவிப்பறை பாதிக்க காதில் அறைந்த ஆசிரியர் – யாழ்.நகர பாடசாலையில் சம்பவம்

மாணவனின் செவிப்பறை பாதிக்க காதில் அறைந்த ஆசிரியர் – யாழ்.நகர பாடசாலையில் சம்பவம்

ஆசிரியர் அறைந்ததால் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅம்மோவ் பாலிவுட் படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு பேசப்பட்ட சம்பளம் தொகை எவ்வளவு தெரியுமா.?
Next articleவிஜே சித்ராவின் மரணம் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட போலீஸ் அதிகாரி !! எல்லாமே பொய்யா