கேகாலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதியான மஹீபால ஹேரத் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களால் அவரது வீடு முற்றுகையிடப்பட்டு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அங்கிருந்த பொருட்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.