Home Local news மன்னாரில் வீடு நோக்கி பயணித்த இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மன்னாரில் வீடு நோக்கி பயணித்த இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு, விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார்.

இந்த நிலையிலே அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், சடலத்திற்கு அருகிலிருந்து அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்தலத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மன்னாரில் வீடு நோக்கி பயணித்த இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கையில் தடுப்பூசி அட்டை இன்றி பொது போக்குவரத்தில் பயணிக்க முடியுமா?
Next articleஇரவாகியும் வீடு திரும்பாத இளம் குடும்பஸ்தர் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்பு