தனது மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஒருவர் இன்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றிய மேஜர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
சந்தேகநபரான மேஜரை பயணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறை தலைமை பொலிஸ் பரிசோதகர் சமிந்த பிந்துவின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.