Home திருகோணமலை செய்திகள் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய கணவன்! திருகோணமலையில் சம்பவம்

மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய கணவன்! திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த வீ.திவ்யா (30 வயது) என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபோதையில் வந்த கணவன், மனைவியான குறித்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மனைவி அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணின் கணவனை அயலவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவீதியில் வாகனத்தை நிறுத்தி எரிவாயு பெறும் பொலிஸ் அதிகாரி
Next articleஅனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 23.06.2022